சென்னை மாவட்டப் பள்ளிகளில் அரையாண்டு முன் தேர்வு ரத்து!

Chennai: சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அரையாண்டு முன் தேர்வுகள் (2nd Midterm) ரத்து செய்யப்படுவதாக முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாகச் சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘சென்னை முதன்மைக் கல்வி அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், சென்னை பள்ளிகள், மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஆதி திராவிடர் நலத்துறை மற்றும் Truncated பள்ளிகளுக்காக 10 முதல் 12-ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு சென்னை மாவட்டத் தேர்வுக் குழுவின் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இச்செயல்முறைகளுடன் 10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள அரையாண்டு முன் தேர்வுகள் (Pre Half yearly exams) தொடர் மழையால் பள்ளிகள் விடுமுறை விடப்பட்டுள்ளதாலும் ஆசிரியப் பெருமக்கள் பாடங்களை முடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாலும் ஆசிரியர்களின் வேண்டுகோளுங்கிணங்க மேற்காணும் அரையாண்டு முன் தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது என்று அனைத்துவகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு தெரிவிக்கலாகிறது; என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடையத் தொடங்கியுள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த 31-ம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சென்னை மாவட்ட பள்ளிகளில் முன்அரையாண்டுத் தேர்வு நவம்பர் 6-ம் தேதி முதல் நடைபெறுவதாக இருந்தது.

சென்னையில் நள்ளிரவில் வெளுத்துவாங்கிய மழை!

rain

சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. கடந்த இரண்டு நாள்களாக சென்னையில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இந்நிலையில், நள்ளிரவு 2 மணிக்கு மேல் கனமழை வெளுத்துவாங்கியது. சமீபத்தில், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்துவருகிறது. சென்னையில், இரவு நேரங்களில் விட்டுவிட்டு மழை தொடர்ந்து வந்தது.

Image result for rain

அதேநேரம், வெயிலின் தாக்கமும் குறைந்தபாடில்லை. பகல் நேரங்களில் கடுமையான அனல்காற்றும் வீசிவந்தது. இந்நிலையில், வளிமண்டலத்தில் ஏற்பட்ட மேலடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழகத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.

சென்னையில், காலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காட்சி தந்தாலும், மழை பெய்வதற்கான வாய்ப்புகள் தென்படவில்லை. வானிலை மையம் தெரிவித்ததுபோல, தற்போது வெப்பச்சலனம் காரணமாக மழை கொட்டித்தீர்த்தது. தென்மேற்குப் பருவமழைக் காலத்தில், சென்னை மாவட்டத்தில் 395.9 மி.மீ மழை பெய்திருக்கிறது.

இது வழக்கத்தைவிட 12 சதவிகிதம் அதிகம். சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வழக்கத்தைவிட சிறிது அதிகமாகப் பெய்த போதிலும், சென்னை ஏரிகளில் நீர் மட்டம் குறைவாகவே உள்ளது. இதனால், சென்னை மாவட்டத்துக்குப் போதுமான அளவு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் நீடித்துவருகிறது.

Source: vikatan